சூரியனின் புற ஊதா கதிர்கள் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப்பந்தை பாதுகாப்பது ஓசோன் படலமாகும். இந்த படலம் தற்போது அதீத ரசாயனங்கள், வாயு மற்றும் புகைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஓசோன் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதும், ஓசோனை பாதுகாப்பதற்கான தீர்வுகளை தேடுவதற்குமான நாளாகும்.