இன்றைய ராசி பலன் (19/05/2024)

13894பார்த்தது
இன்றைய ராசி பலன் (19/05/2024)
மேஷம்: இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பணம் சம்பாதிப்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உங்களிடம் காணப்படும் உற்சாகமான மன ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய நாள் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள் நேரும். விரைவில் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதன் வேகத்தை குறைத்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்காது. என்றாலும் வருத்தப்படுவதை குறைத்துக் கொண்டு, உங்களுக்கு விருப்பமான விஷயங்களுக்காக நேரத்தையும் திறமையையும் பயன்படுத்துங்கள். இன்று அதிர்ஷ்டமான நிதிநிலைமை காணப்படாது. பணம் சம்பாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை பதட்டமின்றி இருக்க முயலுங்கள். உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி கால் வலியைக் குறைக்க உதவும்.

கடகம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி உங்களுக்கு சாதகமாக அமையும் நாள். மிகவும் அற்புதமான நாள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும். இன்று மொத்தத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நல்ல தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

சிம்மம்: எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று பொறுமை அவசியம். இன்று உங்கள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சிறு கடன்கள் மூலம் உங்கள்அடிப்படை தேவைகளை எளிதாக சமாளிக்கலாம். உங்கள் உடல் நலத்தை சீர்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு பணம் செலவு செய்ய நேரலாம்.

கன்னி: ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டல் மற்றும் அடிக்கடி கோவிலுக்கு செல்வது மனதிற்கு ஆறுதல் தரும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பயணத்தின் போதும் பணத்தை கையில் கொண்டு செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போது குறைந்த அளவில் பணத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்று பணம் செலவு செய்ய நேரலாம்.

துலாம்: நீங்கள் அதிகப்படியாக செயலாற்றினால் வெற்றியைக் காண நேரலாம். உங்களின் நகை மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பது அதுவும் இன்று சேமிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். இன்று தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாள் அமைதியாக எந்த தடைகளுமின்றி காணப்படலாம்.

விருச்சிகம்: இன்று இனிமையான சாதகமான நாள். இன்று நல்ல பலன்களைக் காண்பீர்கள். இன்றைய நாளை முறையாக திட்டமிடவும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணம் அபரிமிதமாக காணப்படும். அதனை உங்களின் நலனுக்கு பயன்படுத்துவீர்கள். பணத்தை சிறந்த முறையில் செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் நேர்மறையான போக்கின் காரணமாக நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் அக்கம் பக்கத்தவரின் ஆதரவு கிடைக்கும். வெளி நாட்டிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு தேவைப் படும் பொழுது அந்தப் பணம் கிடைக்கும். நேர்மறையான எண்ணம் மற்றும் திட்டமிடல் மூலம் இன்று பதட்டமின்றி இருக்கலாம். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். நீங்கள் அதிகமாக செலவு செய்வீர்கள். ஆனால் சிறப்பாக திட்டமிட்டால் பணம் குறைவாக செலவு செய்யலாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

கும்பம்: இன்று சிறப்பான பலன்கள் கிடைக்காது. என்றாலும் அமைதியாக செயல்களை கையாண்டால் சரியாக செயலாற்றலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகம் பணம் இன்று உங்களுக்கு தேவையாக இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக இன்று பணம் செலவு செய்ய நேரும்.

மீனம்: நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று கணிசமான பணம் சேமிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இன்று முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

தொடர்புடைய செய்தி