தமிழகத்தில் இன்றைய மின்தடை அறிவிப்பு

67பார்த்தது
தமிழகத்தில் இன்றைய மின்தடை அறிவிப்பு
சிவகங்கை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஆகஸ்ட் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

ராமநாதபுரம்: பரமக்குடி உபமின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 17) பராமரிப்பு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி(நகர் முழுவதும்), சத்திரக்குடி, நயினார்கோவில், கமுதக்குடி, சிட்கோ, பெருமாள்கோவில், எமனேசுவரம், மஞ்சூர், என்.டி.சி. நூற்பாலை மற்றும் அருகில் உள்ள இதர பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நாமக்கல்: கபிலர்மலை துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், கபிலா்மலை, மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா் செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்: ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ளது. ஒரத்தநாடு புதூர், புதூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்காடிப்பட்டி, குக்கரை, எலந்தவெட்டி, பாளம், பாளம் புதூர், தெலுங்கன்குடி காடு, புலவன்காடு, வளத்தான் தெரு, பேய்கரும்பன் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்: மின் பராமரிப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 17) ஆத்தூர் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்கு காடு, பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர்: மன்மங்கலம் தாலுகாவில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 17) பராமரிப்பு பணி நடைபெறுவதால் அரசு காலணி, வாங்கப்பாளையம், வெங்கமேடு, மன்மங்கலம், என் புதூர், வள்ளியம்பாளையம், கடம்பக்குறிச்சி , வடுகப்பட்டி, வாங்கல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை: வேங்கிக்கால், ஊசாம் பாடி, துர்க்கைநம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சி பட்டு, நொச்சி மலை, மலபாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், புண்ணியந்தல், கலஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி,சேரியந்தல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை: எஸ்எஸ் காலனி பகுதியில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்எஸ் காலனி, ஜவஹர் தெருக்கள், பொன்மேனி, மெயின் ரோடு, பாரதி மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், சம்மட்டிபுரம் மெயின் ரோடு, விராட்டிபுத்து முடக்குச் சாலை, டோக் நகர், கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 17)
நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி சுற்றுப்புற கிராமங்களுக்கும் மற்றும் காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை: சிப்காட் துணைமின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி: திருவெறும்பூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் திருவெறும்பூர், கிருஷ்ணசமுத்திரம், மலைக்கோவில், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, டி. நகர், சோழமாநகர், சோழமாதேவி, புதுத்தெரு, பிரகாஷ் நகர், வேங்கூர், கக்கன் காலனி, பர்மா காலனியில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்: பழநி துனை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்காரபட்டி, சி. கலையம்புத்தூர், க. நாயக்கன் பட்டி, புளியம்பட்டி, தும்பலபட்டி, பாறைபட்டி, கே.ஜி.வலசு ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி