தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

67பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதே போல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. மழை காரணமாக திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.