திருப்பதி கோயில் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு நெய் கலந்ததற்கு தோஷம் நீக்குவதற்காக, இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி 'ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ' என்று மந்திரம் படிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என்பது நம்பிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.