வைணவ சபை சார்பில் வைணவ மாநாடு

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ மந்நாதமுனிகள் வைணவ சபை சார்பில் 41 -ஆம் ஆண்டு வைணவ மாநாடு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் சபை தலைவர் மணிவண்ண ராமானுஜ தாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர்கள் சீனிவாச ராமானுஜ தாசர் முன்னிலை வகித்தார். முரளி அனைவரும் வரவேற்றார். இதயொட்டி டாக்டர் எம். குமார் நிர்மல்ராஜ் முன்னிலையில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. தென்வணக்கம்பாடி ஸ்ரீ பட்டாபிராம பிரபந்த இன்னிசை பஜனை சபை சீனிவாச ராமானுஜ தாசர் தலைமையில், வந்தவாசி கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து பஜார் வீதி வழியாக திருநாமஸ்திர கீர்த்தன கோஷ்டிகள் திருவீதி உலா நடைபெற்றது. கருட கொடியை டாக்டர் எஸ். குமார் நிர்மல்ராஜ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதில் கலைச்சுடர் மணி மாம்பட்டு பார்த்திபன் தலைமையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபை குழுவினரால் பிரபந்த இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இவ்விழாவில் கைங்கரிய செல்வர் விருதை தென்திருப்பேரை அரவிந்த லோஷன் சுவாமிகள் வழங்க கடமை புத்தூர் ஸ்ரீ பகவத் இராமானுஜர் பொன்னடி அறக்கட்டளை துறை ஏழுமலை ராமநாத தாசர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி