பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு

85பார்த்தது
பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் மூன்று கழிப்பறை செயல்பட்டு வருகிறது ஏனெனில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கழிப்பறையை நகராட்சி நிர்வாகம் சீர் செய்யாமல் தற்போது ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்கான பழைய பஸ் நிலையத்தில் முகப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் பஸ்கள் திரும்பும் போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் கழிப்பறை கட்டிடம் சீரமைக்கப்படாமல் புதிய கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நகரமன்ற தலைவர் ஜலாலை கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் பெரும்பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி