திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அருந்தோடு கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. எதிரொலிமணியன், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், ஒன்றிய கழக செயலாளர்கள் T. D. ராதா, A. சுந்தரேசன், ப. இளங்கோவன், அருந்தோடு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். கார்மேகம், ஒன்றிய கவுன்சிலர் கவிதா பூபாலன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் V. ராமு, தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணியம்மை தேவன், சுகந்தினி கோபிநாதன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் M. விநாயகமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் TVG. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் சக்ரவர்த்தி, தெள்ளார் ஊராட்சி செயலாளர் B. காமராஜ் வெடால் பாலாஜி ஒன்றிய விவசாய அணி பாஞ்சரை. பட்டாபிராமன், கிளைக் கழக செயலாளர் கோட்டையார் ஏழுமலை, தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் T. G. மோகன், ஒன்றிய இளைஞரணி சுரேஷ், ஊராட்சி ஒன்றிய குழு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.