9 வயது சிறுமி சிலம்பம் சுற்றியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்

75பார்த்தது
9 வயது சிறுமி சிலம்பம் சுற்றியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகுமார். அவரது மகள் தேஷ்மிதா(9). அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று சிலம்பம் ஆடியபடி 14 கி. மீ. தூரம் கிரிவலம் சென்று சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

அதிகாலை 5. 30 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் சிலம்பம் ஆடியபடி கிரிவலத்தை தொடங்கிய மாணவி தேஷ்மிதா, காலை 9. 30 மணியளவில் ராஜகோபுரம் முன்பு கிரிவலத்தை நிறைவு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி