பாரீஸ் பாராலிம்பிக்கில் ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்விந்தர், தற்போது பாரீஸ் பாராலிம்பிக்கில் போலந்தின் லுகாஸ் சிசெக்கை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் அல்லது ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்விந்தர் சிங்.