சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.

78பார்த்தது
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரிமா சங்கம், பத்யாவரம் அமலராக்கினி பாா்வையற்றோா் பள்ளி இணைந்து முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நேற்று நடைபெற்றன.

இந்நிகழ்வில், மாற்றுத் திறனாளிகள் 3 சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் எம். மோசஸ் தலைமை வகித்தாா். ஆரணி நகர வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் எஸ். ராஜன் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி