போளூர் அருகே காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா.

74பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ புதூர் மாரியம்மன், ஸ்ரீ கங்கையம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது


போளூர் அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ புதூர் மாரியம்மன் ஸ்ரீ கங்கையம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோ பூஜை, தம்பதி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நெய்வேத்தியம், யாகசாலை சிறப்பு வஸ்திரம் தீபாராதனை, உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு காளியம்மன், கங்கையம்மன், மற்றும் புதூர் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விளாங்குப்பம், போளூர், ஆரணி, சந்தவாசல், கேளூர், வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி