கொம்மனந்தல்: முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

85பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் கலைஞர் திடலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் எழில்மாறன் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன் கலந்துகொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்தும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாகங்கள் குறித்தும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. வி. ராஜ்குமார், போளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே. வி சேகரன், மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவானந்தம் மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எதிரொலி மணியன், போளூர் நகர செயலாளர் தனசேகரன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி