திருவண்ணாமலை: அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

82பார்த்தது
திருவண்ணாமலை: அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செங்கம் மேற்கு ஒன்றியச் செயலர் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தார். 

நகரச் செயலர் ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலர் துரைசெந்தில் கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின் அவலங்களை அதிமுக நிர்வாகிகள், வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 

மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட மாணவரணி நிர்வாகி பழனிச்சாமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி