திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர் துரைசெந்தில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திறந்துவைத்து
பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.