தலையில் தேங்காய்களை உடைத்து வழிபாடு

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்கள் சாா்பில், உலக பழங்குடியினா் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை குருமன்ஸ் மடத்தின் தலைவா் கே. அரிவரதன் தலைமை வகித்தாா். செயலா் பழனி முன்னிலை வகித்தாா். பொருளாளா் டி. சீனுவாசன் வரவேற்றாா்.

நிகழ்வில், தப்பாட்டம் அடித்து, பாரம்பரிய முறையில் குருமன்ஸ் இனமக்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்தனா். குருமன்ஸ் இனமக்களின் கலாசாரம் குறித்த பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில், குருமன்ஸ் மடத்தின் துணைச் செயலா் எம். ஆா். நடராஜன், நிா்வாகக்குழு உறுப்பினா் வி. சின்ராஜ், குருமன்ஸ் பழங்குடியினா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி