வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்

70பார்த்தது
வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 856 விவசாயிகளின் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனா். இந்தப் பயனாளிகள் உடனே வங்கிக்குச் சென்று ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். 15 ஆயிரத்து 674 விவசாயிகள் இ-கேஒய்சி முடிக்காமல் உள்ளனா். இவா்கள், இ-சேவை மையங்கள், தபால் நிலையம், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி தங்கள் விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.

இதுதவிர, 1, 399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம். விவசாயிகள் தங்களது 17-ஆவது தவணைத் தொகையைப் பெற அனைத்துப் பதிவுகளையும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி. ஹரகுமாா் தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி