பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

65பார்த்தது
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜேடிஎஸ் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏசிஎம்எம் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து தீர்ப்பளித்தது. அவர் எதிர்வரும் 24ஆம் தேதி வரை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாலியல் வீடியோக்கள் வைரலானதை அடுத்து பிரஜ்வல் ஏப்ரல் மாதம் வெளிநாடு தப்பினார். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து மே 31 அன்று பெங்களூரு திரும்பிய அவரை எஸ்ஐடி குழு கைது செய்தது. பின்னர் அவர் விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி