காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு சுயேட்சை எம்.பி ஆதரவு.!

53பார்த்தது
காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு சுயேட்சை எம்.பி ஆதரவு.!
பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 101 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற விஷால் பாட்டீல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், தற்போது பப்பு யாதவ் வருகையால் காங்கிரஸ் எம்.பி களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது.