பாகிஸ்தான் குறித்து மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து

79பார்த்தது
பாகிஸ்தான் குறித்து மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர்ந்தால், பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். இது மோடியின் பதவியேற்பு நாளில் பீதியை உருவாக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அவர் விமர்சித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி