15,000 கொசுக்களுக்கு ரத்த தானம் அளித்த நபர் (வீடியோ)

55பார்த்தது
உயிரியல் நிபுணர் ஒருவர் தனது ரத்தத்தை கொசுக்களுக்கு தினமும் ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தானாக முன்வந்து கொசுக்கள் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் கையை வைக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வினோத செயலில் ஈடுபடும் உயிரியலாளர் பெர்ரான் ராஸ் கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகக் கூறுகிறார். ஆராய்ச்சிக்காக கொசுக்களுக்கு யாராவது உணவளிக்க வேண்டும், அதை நானே செய்கிறேன் என்று அசால்ட்டாக சொல்கிறார் பெர்ரான். இதுவரை 15,000 கொசுக்கள் அவரைக் கடித்துள்ளதாவும் சொல்லப்படுகிறது.
Job Suitcase

Jobs near you