அருள்மிகு ஸ்ரீ பட்டிணங்காத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா.

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டக்கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டிணங்காத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



போளூர் அடுத்த மண்டக்கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டிணங்காத்தம்மன் ஆலய அமைந்துள்ளது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் மீண்டும் கிராம மக்களால் புனரமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கணபதி பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம் நவகிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில் இறுதியாக நதிகளில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த்தங்களை கொண்டு கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கான போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி