திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஊராட்சி திட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.