திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெறையூர் ஊராட்சியில் உள்ள வி. பி. எஸ் திருமண மண்டபத்தில் இன்று (26. 07. 2024) மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருவதை, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வருவாய்த்துறை சார்பாக பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் இருந்தனர்.