ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொலை.. ரஷ்யா தகவல்

52பார்த்தது
ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொலை.. ரஷ்யா தகவல்
உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, 2 கவச வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி