திருவண்ணாமலை மாவட்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தவிழாவின் 10ஆம் நாள் விழாவான இன்று (டிச.13) அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிளது.