முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பௌர்ணமி நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதே போல், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் பகுதி உள்வாங்குவது வழக்கம். நாளை பௌர்ணமி என்பதால் தற்போது திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் சுமார் 70 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.