சென்னை மேற்கு மாம்பலம் அருகே கடந்த 5ஆம் தேதி மாலை, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை, பைக்கில் சென்ற நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அப்பெண், தனது தந்தையிடம் கூறிய நிலையில் அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், மதுரையில் பதுங்கியிருந்த நேதாஜி (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.