இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இன்று (டிச.13) நாளை (டிச.14) விவாதம் நடத்தப்படுகிறது. மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் இதேபோன்ற விவாதத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. அதேபோல் மாநிலங்களவையில் 16,17 ஆகிய நாட்களில் விவாதம் நடைபெறும்.