உடலை அடக்கம் செய்ய பொது வெளியில் எடுத்துச் செல்ல மறுப்பு

78பார்த்தது
மோத்தக்கல் கிராமத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பொது வெளியில் எடுத்துச் செல்ல மறுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா மொத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் மனைவி கிளியம்மாள் என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்து உள்ளார் அவரது உடலை நல்லடக்கம் செய்ய வழக்கம்போல் செல்லும் மயானபாதைக்கு எடுத்துச் சென்ற போது தனிநபர்க்கு சொந்தமான இடத்தில் எடுத்துச் செல்ல கூடாது என மாற்று சமூகத்தைச் சேர்ந்த இடத்தின் உரிமையாளர் மறுத்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து உறவினர்களும் கிராம மக்களும் உடலை அடக்கம் செய்ய பொது வழியில் நல்லடக்கம் செய்ய வாகனத்தில் சென்ற போது மாற்று சமூகத்தினர் தடுத்துள்ளனர் இந்த தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ச. நியூட்டன் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று காவல்துறையிடம் சமரசத் பேச்சுவார்த்தை ஈடுபட்டத்தின் பெரில் அடுத்து வழக்கமாக எடுத்துச் சென்ற பாதையில் தற்காலிகமாக இறந்தவர் உடலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் உறவினர்களும் எடுத்துச் சென்று மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்
இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன் மணிஒன்றிய பொருளாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி