அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் சில முக்கிய கட்சிகளுடனும் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.