திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் ஒன்றியம், கிழ்பாலூர் ஊராட்சியில் கன்று விடும் விழாவை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவக்குமார் , சுப்ரமணியன், கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் உள்ளிட பலரும் கலந்து கொண்டனர். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான கன்றுகள் கலந்து கொண்டு சீறி பாய்ந்தது.