ஆதார் பயோ மெட்ரிக் மூலம் கைரேகை சரிபார்த்த பிறகே, சிம் விற்பனை செய்வதை உறுதி செய்யும்படி தொலைத் தொடர்பு துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சிம்கார்டு மூலம் முறைகேடு நடைபெறுவதை தடுக்க, ஆதார் பயோ மெட்ரிக் சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதையும் மீறி முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.