நகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

77பார்த்தது
இந்தியன் வங்கி திருவண்ணாமலை மண்டலம் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் மரக்கன்றுகளை நட்டு சாலை ஓர வியாபாரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுகளுக்கு கடன் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர், மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், வங்கி மேலாளர் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி