தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (ஆகஸ்ட் 26) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை பூஜையில் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து மகிழ்வார்கள். இதையொட்டி திருவண்ணாமலையில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு வகையான விதவிதமான களிமண் கிருஷ்ணர்-ராதை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அண்ணாமலையார் கோவில் முன்பாக இன்று சிறியது முதல் பெரியது வரை கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.