ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில், சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர்கான் என பலமொழி நடிகர்களும் நடிக்கின்றனர். நேற்றுமுன்தினம் படப்பிடிப்பு முடிந்தது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.