திருவாரூர்: புதுப்பத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் (57) மாவட்ட தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர் ஆவார். கடந்த 2021ல் ஊர்குளத்தை எடுத்து நடத்தும் விவகாரத்தில் வீரையன் என்பவரை நடராஜன் வெட்டி கொல்ல முயன்றுள்ளார். இவ்வழக்கில் கைதான நடராஜன் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நேற்று (மார்ச்.19) உத்தரவிட்டார்.