திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் தேரடி அருகில் உள்ள வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று(செப்டம்பர் 1) ரோட்டரி கிளப் ஆப் தெள்ளார், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கண்ணில் புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம், நீர் வடிதல், தலைவலி, தூரப்பார்வை உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.