திமுக செயல்வீரர்கள் கூட்டம், எம் எல் ஏ பங்கேற்பு

85பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் கிழக்கு, மேற்கு மற்றும் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகம், புதுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் சீனுவாசன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி