செய்யாறு - Cheyyar

செய்யாறு: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு செய்யாறு கண்ணியம் நகர் டாக்டர் அம்பேத்கர் இளைஞரணி நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ. ஜோதி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ. 50000 மற்றும் இரண்டாம் பரிசு ரூ. 40000 வழங்கினார்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
வந்தவாசியில் அமைச்சர் தலைமையில் நலத்திட்ட உதவிகள்
Apr 14, 2025, 05:04 IST/வந்தவாசி
வந்தவாசி

வந்தவாசியில் அமைச்சர் தலைமையில் நலத்திட்ட உதவிகள்

Apr 14, 2025, 05:04 IST
வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் வெண்குன்றம் கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு பேசியதாவது: விலைவாசி உயா்வுக்கு மாநில அரசு காரணமில்லை.  ஜி.எஸ்.டி. தான் காரணம். முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் ஜி.எஸ்.டி. தமிழகத்தின் உள்ளே வந்தது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் ஜி.எஸ்.டி. யிலிருந்து மாநிலத்துக்கு உரிய பங்கைத் தருவதில்லை. புயல் சேத நிவாரணமும் மத்திய அரசு தருவதில்லை. தமிழகத்தில் பெண்கள், மாணவ, மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இந்தியாவுக்கே வழிகாட்டியாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. 2026-ஆம் ஆண்டிலும் மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராக ஆவாா் என்றாா்.  நிகழ்ச்சியில் 7,200 பேருக்கு தையல் இயந்திரம், கிரைண்டா் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். மாநில மருத்துவா் அணி துணை அமைப்பாளா் எ.வ.வே. கம்பன், எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., எஸ். அம்பேத்குமாா் எம்எல்ஏ மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.