திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் எழுத்தாளர் எறும்பூர் கை. செல்வக்குமாருக்கு எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணின் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் தமிழரசன், பிடிஏ தலைவர் முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் , நண்பர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.