கழிவறையில் பாம்புகள்- மாணவியர் அச்சப்பட வேண்டாம்

63பார்த்தது
கழிவறையில் பாம்புகள்- மாணவியர் அச்சப்பட வேண்டாம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வேதியல் துறை கட்டிடத்தில் உள்ள மாணவியர் கழிவறையில் பாம்புகள் இருந்ததை கண்டு மாணவிகள் முதல்வரிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினரால் பாம்புகள் அனைத்தும் பிடிக்கப்பட்டன.

மேலும் கல்லூரி வளாகத்தில் பாம்புகள் இருக்கின்றனவா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் இது குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி