வாகன விபத்தில் ஒருவர் பலி

2577பார்த்தது
வாகன விபத்தில் ஒருவர் பலி
சென்னை கோயம்பேடு பகுதியை சோந்தவா் ராஜேந்திரன் (58). கட்டடத் தொழிலாளி. இவா் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தென்இலுப்பை கிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். ராஜேந்திரன் கடந்த 18-ஆம் தேதி இரவு வீட்டின் எதிரே உள்ள சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். விபத்து குறித்து அனக்காவூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண் டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி