திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமண்டூர் ஊராட்சியில் இன்று (செப்.,4) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.