புதுச்சேரி: ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுசூழல் மன்றம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், மாணவர்களிடம் இயற்கை மற்றும் தற்சார்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் குரோபேக் மற்றும் 5 வகையான கீரை விதைகள் வழங்கப்பட்டது. மேலும், செயற்கை உரங்களால் ஏற்படும் தீங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.