சென்னை அணி அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் விளையாடி வருகிறது. 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்து வரும் சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ரச்சின் 3, கான்வே 13, கெய்க்வாட் 5, டூபே 18 மற்றும் ஜடேஜா 2 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போது CSK அணி, 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.