திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட இருளர் இன மக்களுக்கு ஜென்மன் திட்டத்தில் ரூ. 5. 07 இலட்சம் மதிப்பீட்டில் அரசு இலவச கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கு மாவட்ட கழக துணை செயலாளரும் , செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி பணி ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ், மு. ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் சி. பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். ஜோதி, து. வெங்கடேசன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.