திருவண்ணாமலை: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

52பார்த்தது
திருவண்ணாமலை: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஈ.வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

உடன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் ஈ.வே. கம்பன், திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி