இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், விரைவில் சினிமா வாழ்கைக்கு முழுக்கு போடவுள்ளார். அதற்கு முன்னதாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த விஜய், கட்சிக் கொட்டியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த சூழலில் அரசியல் வருகைக்கு பிறகு விஜய்யின் முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பத்மாவதி திரையரங்கில் இன்று இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் படத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டு தேர்தல் வாசலில் ஆரவாரத்துடன் காணப்பட்டனர். நுழைவாயிலில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.