வீட்டில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கிருமிகளோ, துர்நாற்றமோ ஏற்படாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைத் தொட்டியில் பாலிதீன் கவர் வைப்பதால் குப்பைகளை எளிதில் கொட்டலாம் என்பதோடு அழுக்கும் சேராது. மூடி இருப்பது போன்ற குப்பைத் தொட்டியை பயன்படுத்துவது நல்லது. கழிவுகள், சமையலறையில் சேரும் காய்கறித் துண்டுகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் தினமும் அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.